LOADING

Type to search

உலக அரசியல்

எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா

Share

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இந்த எண்ணெய் தட்டுப் பாடு எதிரொலித்தது. இதனால் பல ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஸ்பிரிட் ஏர் லைன்ஸ் விமான நிறுவனம் மூடப்பட்டது. மேலும் பல எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கிடைக்காமல் மூடக்கூ டிய அபாயம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க அரசாங்கம் போர் கால அடிப்படையில் ‘ சேமித்து வைத்துள்ள எண்ணெய் இருப்பில் இருந்து 9% கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்குவதாக அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது தனது எண்ணெய் இருப்புத் தொகையில் இருந்து 5.33 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை கடனாக வழங்கியது. எக்ஸான் மொபில், மராத்தான் பெட்ரோலியம் மற்றும் டிராபிகுரா உள்பட 9 நிறுவனங்களுக்கு இந்த எண்ணெய் வழங்கப்படுகிறது. இதில் டிராபிகுரா நிறுவனம் மட்டும் சுமார் 1.3 கோடி பீப்பாய் எண்ணெயைப் பெறுகிறது. கடன் வாங்கிய நிறுவனங்கள் 2029-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணெயை வட்டியுடன் (24 சதவீதம் கூடுதல் எண்ணெய்) மீண்டும் அரசிடம் ஒப்படைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.