LOADING

Type to search

சினிமா

எபோலா வைரஸ் பரவல் – உலக சுகாதார அவசரநிலை பிரகடனம்

Share

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்​களில் ஒன்றாகும். இது உடலின் உட்​புற உறுப்​புகளில் கடுமை​யான ரத்​தப்​போக்​கு, உறுப்பு செயலிழப்பு மற்​றும் மரணத்தை ஏற்​படுத்​தக் கூடும். காங்கோவில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பலமுறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்ட நிலையில், தற்போது 17-வது முறையாக மீண்டும் காங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக காங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வருகிறது. தற்போது மீண்டும் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் காங்கோவில் இதுவரை 88 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் அண்டனியோ டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று போன்ற மிக அவசரநிலை ஏற்படவில்லை என்றபோதிலும் நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.