எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து சாய் பல்லவி விலகல்
Share
இசை உலகில் பெரும் சாம்ராஜ்யத்தை படைத்தவர் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரது வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது. கவுதம் தின்னனுரி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைப் பயணம் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களை திரையில் கொண்டு வர படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க நடிகை சாய்பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சாய்பல்லவிக்கு பதிலாக ருக்மினி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பில் விசாரித்த போது, ‘சாய்பல்லவி ராமாயணம் மற்றும் அவர் ஒப்புக் கொண்ட படப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி கேரக்டருக்கு உயிர் கொடுப்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என கூறினார். படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















