LOADING

Type to search

கனடா அரசியல்

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்”

Share

அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்


“தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ஒரு தலைவராக விளங்கி அனைத்து எழுத்தாளர்களையும் அணைத்துச் செல்லும் நற்பண்புகள் நிறைந்த ஒருவராகவும் திகழ்கின்றார்.

இதற்கு மேலாக எமது எழுத்தாளர் இணையத்தின ஏற்பாட்டில் தற்போது மாதாந்தம் நடைபெறும் எழுத்தாளர் ‘உரையரங்கம்’ நிகழ்வில் அவர் ஆற்றிய உரையென்பது அவரை ஒரு சிறந்த வாசகனாக்கிய அவரது தந்தையாருக்கு ஒரு ஞாபகார்த்த உரை வழங்கியபோன்று ஒரு சிறப்பான உரையை ஆற்றினார். அதை நேரடியாகச் செவிமடுத்த நான் என் கண்களில் நீர் பனித்திருந்ததையும் அவதானித்தேன்”

இவ்வாறு கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் நடைபெற்ற க. ரவீந்திரநாதன் அவர்களின் ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில்’ நட்புரை’யாற்றிய ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம் சூட்டினார். தற்போது கனடா எழுத்தாளர் இணையத்தின் தலைவராகத் திகழும் ரவீந்திரநாதன் அவர்களின் மேற்படி நூல் வெளியீட்டுழரிழாவிற்கு எழுத்தாளரும், கவிஞரும், பொறியியலாளரும் முன்னாள் தலைவருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

அகணி சுரேஸ் அவர்கள் தனது தலைமை உரையில்

“எமது எழுத்தாளர் இணையத்தின் தலைவராகத் திகழும் க.ரவீந்திரநாதன் ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதோடு எமது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தனாதிகாரியாக இருந்தபோது நிதி சம்பந்தப்பட்ட பணிகளை சிறப்பாக ஆற்றியது போன்று. தற்போது தலைவராக இருந்து ஆற்றிவரும் பணி என்பது சாலச்சிறந்ததாக விளங்குகின்றது. இவரோடு எமது எழுத்தாளர் இணையத்தில் அங்கம் வ கிக்கின்ற அனைவரோடும் ரவீந்திரநாதன் அவர்கள் நட்போடும் அன்போடும் உறவாடி வருகின்றார்கள். இந்தப் பண்பானது எமது இணையத்தை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்றால் அது மிகையாகாது” என்றார்.
மேற்படி க. ரவீந்திரநாதன் அவர்களின் ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவானது மண்டபம் நிறைந்த ஒரு விழாவாக பல்வேறு துறைசார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டதும். அவரது ஊரவர்கள் நிறைந்த காணப்பெற்ற வகையில் சபை அழகுறக் காணப்பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் கனடா தேசிய கீதம் ஆகியவற்றை ா செல்விகள் சோலை இராஜ்குமார், சன்னி இராஜ்குமார் மற்றும் சோழன் இராஜ்குமார் ஆகியோர் இசைத்தனர்.
வரவேற்புரையை திருமதி ஜோதி செயக்குமார் ஆற்றினார்

மற்றுமொரு நட்புரையை எழுத்தாளர் இணையத்தின் முன்னாள்; தலைவர் குரு அரவிந்தன் அவர்கள் சிறப்பாக ஆற்றினார்.

தொடர்ந்து எழுத்தாளர் ரவீந்திரநாதன் அவர்களின் நண்பர் சோதி மாணிக்கம் அவர்கள் கவிதை நடையில் அறிமுக உரையை ஆற்றினார்.

வாழ்த்துக் கவிதை ஒன்றை கவிஞர் சித்திவிநாயகம் அவர்கள் வாசித்து வாழ்த்தினார் நூல் அறிமுக உரைகளை திருமதிகள்உலர ிகைா பவானந்தன் மற்றும் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்கள் ஆகியோர் ஆற்றினர். நூல் மதிப்புரையை எழுத்தாளர் இணையத்தின் செயலாளர் முனனவர் வாசுகி நகுலராஜா அவர்கள் ஆற்றினார்கள்

தொடர்ந்து நூல் வெளியீட்டுரையை இணையத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் பேராசிரியருமான இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் ஆற்றினார்

நூலின் முதற்பிரதியை எழுத்தாளர் ரவீந்திரநாதன்அவர்களின் மாமியார் திருமதி ராஜினி அரசரட்னம் அவர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்;து வாழ்த்துரைகளை எழுத்தாளர் இணையத்தின் முக்கிய உ றுப்பினர்கள் கமலவதனா சுந்தா அவர்கள்- சிவபாலு தங்கராசா ஆசிரியர் மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன்ஆகியோர் சிறப்பாகவும் காத்திரமாகவும் ஆற்றினார்கள்

இறுதியில் எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் அவர்கள் தனது உணர்வூட்டும் வகையில் தனது நன்றியுரையை ஆற்றினார். தொடர்ந்து நூல் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பெற்றன.