LOADING

Type to search

உலக அரசியல்

ஒரே நாளில் மியான்மர், ஆப்கானிஸ்தான், இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Share

மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அது 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த தகவல்களை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மியான்மர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் காலை 8.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி இருந்தது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.