ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் – விஜய்
Share
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4-வது முறை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.















