“கட்டா குஸ்தி 2” படத்தின் பின்னணி குரல் பணிகளை நிறைவு செய்தார் விஷ்ணு விஷால்
Share
கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல்காட்சி பதாகை சமீபத்தில் வெளியானது. ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் அறிமுக பதாகையை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன ராஜ ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் யோகி பாபு, கருணாகரன், நடிகை மோக்ஷா ஆகியோர் புதிதாக இப்படத்தில் இணைந்துள்ளனர். படம் விளையாட்டு சம்பந்தப்பட்டது என்பதால் சுவாரசியம் கூடியிருக்கிறது. இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால் இந்த படத்திற்கான பின்னணி குரல் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
















