கனடா- BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடகம் நடத்திய LEGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனை விருதுகள் வழங்கும் விழா
Share
கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவனம் முதலாவது முறையாக நடத்திய EGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் பிரமாண்டமான விழா கடந்த 20-06-2026 அன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள Brighton Banquet & Convention Centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவனத்தின் தலைவரும் இந்த LEGENDS & ICONS AWARDS விருதுகள் வழங்கும் விழாவை தொடர்ச்சியாக ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என்ற திடசங்கற்ப்பத்தோடு செயற்படுபவருமான கனேந்திரன் செல்வராஜா அவர்கள் தனது குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
அத்துடன் விழாவின் தொடக்கத்தில் அவரது நிறுவனர் உரை நடைபெற்றது. அதில் தனது வர்த்தக மற்றும் ஊடகப் பயணம்- தமிழ்த் தேசியத்தின் மீது தான் கொண்டுள்ள ஆர்வம் மற்றும் பற்று இவை பற்றியெல்லாம் எடுத்துரைத்தார்.
அன்றை விருது விழாவில் சிறப்பு விருந்தினராக ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் மற்றும் ‘;உதயன்’ பிரதம ஆசிரியரும் பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உப-தலைவருமான லோகன் லோகேந்திரலிங்கம் ஆகியோர் உட்பட மதகுருமார்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் எல்லாமாக 20 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்ன என்பதும் அத்துடன் இலங்கையிலிருந்து மூன்று பெண் சாதனையாளர்களும் இரண்டு ஆண் சாதனையாளர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர். இவர்களில் மூவர் புற்று நோய் வைத்திய நிபுணர்கள் என்பதும் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் சேவை நோக்குடன் பணியாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவுஸ்த்திரேலியாவிலிருந்தும் ஒரு தொழிலதிபரும் கல்வியாளருமான சாதனையாளரும் அன்றைய தினம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்.
விருதுகள் வழங்கும் நிகழ்வுகளுடன்; கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. விருது பெற்ற 20 வெற்றியாளர்களில் குழு அல்லது அமைப்பு என்ற வகையில் கனடாவின் பிறிமா நடனப் பாடசாலை மற்றும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஆகியவை தெரிவு செய்யப்பெற்று விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் உலகெங்குமிருந்து தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.
BEHIND ME INTERNATION FOUNDATION விருது விழாவில் விருதுகளைப் பெறவும் பயனுள்ள மருத்துவக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் வருகை தந்திருந்த இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றும் மருத்துவப் பெருந்தகைகள் டாக்டர் ஶ்ரீதரன் கணேசமூர்த்தி. டாக்டர் அஹமட் இக்பால் மற்றும் டாக்டர் கவிதா இந்திரநாத் ஆகியு 3 வைத்திய கலாநிதிகள் மற்றும் BIG BOSS மற்றும் ‘லியோ’ திரைப்படப் புகழ் ஜனனி அவரோடு இலங்கையில் சமூக ஊடகத் தளத்தில் புகழ்பெற்ற பேர்லிஜா ஆகிய ஐவரும் தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது


























