LOADING

Type to search

சினிமா

கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல் – ஆர்.ஜே. பாலாஜி பதிவேற்றம்

Share

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு.” பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற மே மாதம் 14-ஆம் தேதி வெளியீடு ஆகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள “கருப்பு” படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் “நாங்க நாலு பேரு” பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல் தமிழ் புத்தாண்டுக்குள் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார். சென்னையில் நேற்று (ஏப்ரல் 7) இரவு நடைபெற்ற லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, “கருப்பு திரைப்படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டுக்குள் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும்,” என்று தெரிவித்தார்.