கருப்பு படத்தில் சிம்பு குரலில் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியானது
Share
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியான கருப்பு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் இப்படம் காணக்கிடைக்கிறது. இந்நிலையில், ‘கருப்பு’ படத்தில் இடம்பெற்ற ‘நாங்க நாலு பேரு’ பாடலின் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையமைப்பில் அசல் கோலார், அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
















