LOADING

Type to search

சினிமா

கருப்பு படம் வெற்றியை முன்னிட்டு இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு நடிகர் சூர்யா கார் பரிசளித்துள்ளார்

Share

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜன் சுப்பிரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை நெருங்கும் கருப்பு திரைப்படம் வசூலில் மேலும் பல கோடிகளை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கருப்பு பட வெற்றியை முன்னிட்டு மஹிந்த்ரா பிஈ6 பேட்மேன் எடிசன் காரை இசையமைப்பாளர் சாய் அபியங்கருக்கு நடிகர் சூர்யா பரிசளித்துள்ளார்.