LOADING

Type to search

இந்திய அரசியல்

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா

Share

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் கோரிக்கைக்கிணங்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸின் மேலிட முடிவின்படி, புதிய முதலமைச்சராக தற்போதைய துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார். கடந்த 2023 சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகிய இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என காங்கிரஸ் மேலிடம் ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியூர் சென்றுள்ளதால், அவரது செயலாளரிடம் சித்தராமையா ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

ராஜினாமா செய்வதற்கு முன்பாக மாநில அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் காலை விருந்தளித்துள்ளார் சித்தராமையா. இந்த விருந்தின்போதே, தனது ராஜினாமா குறித்து அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது