LOADING

Type to search

இலங்கை அரசியல்

கல்முனை – பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் தேவைக்காக ‘உதவும் பொற்கரங்கள் கனடா ‘அமைப்பினால் இசைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன

Share

கல்முனை -பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், குறித்த நிதி 14-06-2026 அன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பெற்றது.
நிகழ்வில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு கன. வரதராஜன் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு கா. சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு நிதியை கையளித்தனர்.

உதவும் பொற்கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் கனடா வாழ் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி மற்றும் மாணவர் மேம்பாட்டை முன்னிறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சமூகநலப் பணிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன என்பதும் கடந்த பல வருடங்களாக இவ்வாறான உதவிகளை அவர் மலையகம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் வழங்கி வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.