LOADING

Type to search

உலக அரசியல்

காங்கோவில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர்

Share

காங்கோவில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படததால் அவ்வப்போது படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கசாய் மாகாணத்தில் உள்ள ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் பள்ளி மாணவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். ஆற்றின் மையப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த அணைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் படகில் பயணித்த பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 100 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.