LOADING

Type to search

இந்திய அரசியல்

குவாட் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் அமைச்சர் இந்தியா வருகிறார்

Share

டில்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நாளை (26,5.2026)நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இதனை முன்னிட்டு, அந்நாடுகளின் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்த அழைப்பையேற்று அவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். இதன்படி, குவாட் வெளியுறவு துறை அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜப்பானிய வெளியுறவு துறை அமைச்சர் தோஷிமித்சு மோதெகி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அவருடைய இந்த 2 நாள் பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் இன்று டில்லிக்கு வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேசுகிறார். நாளை (26,5,2026)நடைபெற உள்ள குவாட் வெளியுறவு துறை அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்று, கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்த இருக்கிறார். நாளை மாலை சேவா தீர்த்தத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.