LOADING

Type to search

உலக அரசியல்

குவைத் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது

Share

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 26ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து நேற்று அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.