LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை; மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்பியுள்ளனர் – சசி தரூர் எம்.பி. பேச்சு

Share

கேரளாவில் முதல்-அமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். மே 23-ந்தேதியுடன் கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில், பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 71 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்றது. 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த முறை நடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட இந்த முறை 57 இடங்களில் இந்த கூட்டணி பின்னடைவை சந்தித்து உள்ளது. பா.ஜ.க. கூட்டணி 2 இடங்களில் முன்னிலையும், மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ள சூழலில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் நகரில் நிருபர்களிடம் இன்று பேசும்போது, இதற்கு பல காரணிகள் உள்ளன. இடது ஜனநாயக முன்னணியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். கேரளாவில் என்ன நடக்கிறது என்றால், இளைஞர்கள் பலர் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்ந்து வருகின்றனர். ஏனெனில் வேலைவாய்ப்புகள் எதுவும் இல்லை.

நாம் கேரளாவில் முதலீடுகளை திரும்ப கொண்டு வர முடியும் என்றால், அது நன்றாக இருக்கும். மக்கள் மாற்றம் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துள்ளனர் என்றார்.