LOADING

Type to search

சினிமா

சண்முக பாண்டியன் நடிக்கும் “வாணவேடிக்கை” படத்தில் சிவானி ராஜசேகர் இணைந்தார்

Share

சண்முக பாண்டியன் நடிக்கும் “வாணவேடிக்கை” படத்தில் சிவானி ராஜசேகர் இணைந்தார். மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த ‘கொம்புசீவி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘வாணவேடிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சென்னையில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பு நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குநர்கள் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் ‘வாணவேடிக்கை’ படத்தின் தலைப்பு காணொளியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார். இந்நிலையில் சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படத்தில் நடிகை சிவானி ராஜசேகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.