LOADING

Type to search

இந்திய அரசியல்

சபரிமலை கோவில் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளதென ஆணையர் விளக்கம் அளித்தார்

Share

சபரிமலை கோவிலின் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக திருவாபரண ஆணையர் ரெஜிலால் விளக்கம் அளித்தார். சபரிமலை கோவிலில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளது. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம். மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று மாயமாகி விட்டதாகவும், தமிழக பக்கதர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கிரீடத்தை எடுத்து விட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டடதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில், கோவிலின் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக திருவாபரண ஆணையர் ரெஜிலால் விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்பு அறையில் வைத்திருந்த அரைக்கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமானதாக வெளியான தகவலுக்கு திருவாபரண ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அறையில் வைத்திருந்த அசல் தங்க கிரீடம் பாதுகாப்பாக உள்ளது. சரிபார்ப்பின் போது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் திருவாபரண ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.