LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

Share

சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது உறுப்பு நாடுகளை சிவில் திட்டங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதேநேரம் அணு ஆயுதம் தயாரிக்கப்படாததை உறுதி செய்யும் நோக்கில் அந்த நாடுகளில் ஆய்வும் மேற்கொள்கிறது. இந்த முகமையின் உறுப்பு நாடான சவுதி அரேபியா தனது மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்ட சிவில் தேவைகளுக்கு அணுசக்தியை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் காலத்தில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை தற்போதைய அதிபர் டிரம்ப் காலத்திலும் நீடித்தது. கடந்த ஆண்டும் அமெரிக்க எரிசக்தி அமைச்சர் சவுதி அரேபியா சென்று இது தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.