LOADING

Type to search

சினிமா

சாய் பல்லவி நடித்த ‘ஏக் தீன்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் தனக்கென தனி பாணியுடன் நடித்து வரும் சாய் பல்லவி அடிப்படையில் மருத்துவர் ஆவார். தமிழில் ‘தியா’, தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’, ‘கார்கி’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ ஆகிய படங்களில் நடித்தார். ‘அமரன்’ திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் மீண்டும் தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பாலிவுட் திரைப்பக்கமும் சென்றுள்ளார் சாய் பல்லவி. அமீர்கான் மகன் ஜூனைத் கான் ஜோடியாக ‘ஏக் தீன்’ மற்றும் ‘ராமாயணா’ படங்களில் சாய் பல்லவி நடித்து வருகிறார். அமீர்கான் புரொடக்ஷன் தயாரித்துள்ள ‘ஏக் தீன்’ திரைப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி வெளியாக இருக்கிறது. 2016-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் தாய் மொழியில் உருவான ‘ஒன் டே’ என்ற படத்தின் மறுபதிப்பு ஆகும். இந்த படம் பாலிவுட்டில் சாய் பல்லவிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுக்கும் என திரையுலகிலும் பலர் கூறுகிறார்கள். இந்த நிலையில், ஏக் தீன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இந்த முன்னோட்டம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.