LOADING

Type to search

சினிமா

சிவராஜ்குமார் நடித்த “வெல்கம் டு வைல்ட் லைப்” படத்தின் பதாகை வெளியீடு

Share

வெல்​கம் டு வைல்டுலைப்’ படத்தின் பதாகையை சிவராஜ்கு​மார் மற்​றும் கீதா சிவ ராஜ்கு​மார் இணைந்து வெளி​யிட்​டனர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிவராஜ்குமார் , கார்த்திக் ராஜு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சிவராஜ்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்​குத்​து’, தெலுங்​கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்​கிள்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கார்த்​திக் ராஜு, அடுத்து இயக்​கும் படம் ‘வெல்​கம் டு வைல்டுலைப்’. இதில் சிவராஜ்கு​மார் கதாநாயகனாக நடிக்​கிறார். கன்​னடத்​தில் உருவாகும் இப்​படம் தெலுங்​கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக இருக்​கிறது. இந்த திரைப்படத்தை கேவிகே புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்​கிறார். இதன் பதாகையை சிவராஜ்கு​மார் மற்​றும் கீதா சிவ ராஜ்கு​மார் இணைந்து வெளி​யிட்​டனர்.