சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
Share
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் சோங்கிங் மாகாணம் பெங்ஷி நகரில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரில் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் இருந்த மக்களும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















