LOADING

Type to search

சினிமா

ஜிவி பிரகாஷ் நடித்த “வெக்கை” படத்தின் முதல் பாடல் வெளியானது

Share

ஜிவி பிரகாஷ் நடித்த ‘வெக்கை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நைட்டு நிலா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித்தின் இணை இயக்குநரான அகிரன் மோசஸ் இயக்கியுள்ள ‘வெக்கை’ திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி வில்லனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘வெக்கை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நைட்டு நிலா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கானா பாலா பாடியுள்ளார்.