LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Share

ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததையடுத்து ராக்கெட்டுக்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று இரவு தொடங்கியது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.