LOADING

Type to search

சினிமா

ஜி.வி.பிரகாஷின் “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் பாடல் வெளியானது

Share

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள “இம்மார்ட்டல்” படத்தின் பாடல் வெளியானது. இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மார்ட்டல்’ படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.  டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். காதல், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘லவ்யூ லவ்யூ காட்டேரி’ பாடலை ஷாலி எழுத சாம் சிஎஸ், ரேஷ்மா ஷ்யாம் இணைந்து பாடியுள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.