ஜீவா நடித்துள்ள “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
Share
நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் ‘தகப்பன்’. மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா -மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கிய மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.















