“ஞானபீட விருது” வென்ற கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்
Share
“ஞானபீட விருது” வென்ற கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். கடந்த 13ம் தேதி டில்லியில் நடைபெற்ற விழாவில், காஷ்மீர் மன்னர் பரம்பரையின் வழி வந்தவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், இந்தியத் தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதினை வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கினார். இந்திய இலக்கியத் துறையின் மிக உயரிய விருதான ‘ஞானபீட விருது’ வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான ‘வைரமுத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.. “தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமாக அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்கும். வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும், இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று அமித்ஷா வைரமுத்தை பாராட்டியுள்ளார்,















