LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்

Share

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் வென்றது. இதையடுத்து. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து த.வெ.க. ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய், 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய விஜய், தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசினார். அவர்களிடம் தமிழக அரசுக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் தமிழக முதல்-அமைச்சர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதி உதவியோடு நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சோனியா, ராகுல் உடனான முதல்-அமைச்சர் விஜய்யின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் தனது டில்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை புறப்பட்டார்.