LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது

Share

டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை காவல்துறைக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் டில்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மும்பை காவல்துறை உடனடியாக இந்தத் தகவலை டில்லி காவல்துறைக்கு தெரிவித்தனர். இதன் பிறகு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் டில்லி காவல்துறை தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது ஒரு வதந்தி என காவல்துறை தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைகாலமாக சற்று வெடிகுண்டு மிரட்டல் இல்லாமல் இருந்தவந்தநிலையில், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.