LOADING

Type to search

சினிமா

டோவினோ தாமஸின் “அதிரடி” திரைப்படத்திற்கு “யு” சான்றிதழ்

Share

பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அருண் அனிருத்தன் மின்னல் முரளி திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாசில் ஜோசப் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றியடைந்த லோகா படத்தில் டோவினோ தாமஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.‘அதிரடி’ படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கின்றார். இப்படத்தின் தலைப்பு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், ‘அதிரடி’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.