LOADING

Type to search

இலங்கை அரசியல்

தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை எதிர்க்கும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை

Share

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்காமை தொடர்பாக அதன் தலைவர் கையொப்பமிட்ட வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளருக்கு எழுதிய கடிதம் இங்கு காணப்படுகின்றது

மேற்படி விடயம் தொடர்பான எமது NP/14/41(17)/1/Gen/2025 இலக்க 2025.03.24 திகதிய கடிதத்திற்கு மேலதிகமானது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு 01)

மேற்படி விடயம் தொடர்பாக, வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக மதுபானசாலைகளினை அமைப்பதில் எமக்கு உடன்பாடில்லையென தெரிவித்து தங்களிற்கு கடிதம் வரைவதென 2026.02.23 ஆம் திகதிய பத்தாவது சபை அமர்விலே தீர்மானம் (வ.மே.பி.ச.தீரமான இல.21) நிறைவேற்றப்பட்டுள்ளது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு 02)

மேலும் குறித்த விடயம் தொடர்பில் 2026.09.23 ஆம் திகதிய பதினேழாவது சபை அமர்வில் புதிதாக எந்தவொரு மதுபானசாலைகளிற்கும் அனுமதி வழங்குவதற்கான அனுமதிப்பத்திரங்களினை வழங்க வேண்டாமென தங்களிற்கு கடிதம் வரைவதென தீர்மானம் (வ.மே.பி.ச.தீரமான இல.21) நிறைவேற்றப்பட்டுள்ளது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு -03.)

எமது பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களாக காணப்படுகின்றன. புதிதாக மதுபானசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் மதுபான நுகர்வு அதிகரிப்பதனை ஊக்கப்படுத்துவதாக அமையும் என்பதுடன் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகும். எனவே பொதுமக்கள் பிரதிநிதிகளை கொண்டமைந்த எமது சபையின் தீர்மானங்களினை கருத்திற்கொண்டு பொதுமக்களின் நலன் கருதி எமது பிரதேச சபை பகுதிகளில் புதிதாக எந்தவொரு மதுபானசாலைகளிற்கும் அனுமதி வழங்குவதற்கான அனுமதிப்பத்திரங்களினை வழங்க வேண்டாமென தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.