LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘தமிழரசு’ பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக மக்களுக்கு சேவையாற்றாத நிலையில் நிர்வாகத்தை தம்மிடம் ஒப்படைக்கும்படி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கோரிக்கை!

Share

(க.சரவணன்)

மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும் செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம் ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்

மாநகரசபையின் 17 வது சபை அமர்வு 10ம் திகதி அன்று வியாழக்கிழமை(10) மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது இதன் பின்னர் மாநகரசபையின் எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம் துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ், லதீப் ஆகியோர் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.

“இன்று மாநகர சபையின் 17 வது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது இந்த மாநகர சபை ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன் எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.

இருந்தபோதும்; கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகரசபையின் செயற்பாடுகள் எதவுமே செயல்படுத்தப்படவில்லை நீங்களும் சபையில் இருக்கின்றீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள் தெரிவித்து வருகின்றனர்
மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு, வடிகான் பிரச்சனை உட்பட பிரச்சனைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் அனூல் எதுலும் நடை முறைப்படுத்தப்படவில்லை இன்று எமது மாநகரசபை எல்லையான திருகோணமலை வீதியிலுள்ள லங்காமாதா ஆலையத்தில் இருந்து காத்தான்குடி வரைக்கும் எந்தவொரு மின்விளக்கும் ஒளிர்வதில்லை இதற்கான காரணத்தை கேட்டால் தினம் தினம் ஒவ்வொரு காரணங்களை சொல்கின்றார்.

இந்த வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. கட்டாகாலி மாடுகள் தொல்லை தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை.

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப் பெறவில்லை கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில் மூழ்கியது காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை இது தொடர்பாக கடந்த காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தோம் பயனில்லை.

இந்த வருடம்;; மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப் போகிறது எனவே மழை வெள்ளத்தால்; தாண்டால் அதற்கான முழு பொறுப்பும் முதல்வர் எடுக்க வேண்டும்.

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை இல்லை

அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து பயஅடைத்துள்ளனர் ஏழைகள் துன்பப்படுகின்றனர். குறுக்க வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர் இதனால் அந்த வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர் மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்?

காந்தி பூங்கா அதனை அண்டிய நீதிமன்ற பகுதி வாகன தரிப்பிடத்தில் ரூபா மோட்டார் சைக்கிளுக்கு 100 ரூபாவும் தலைகவசம் வைப்பதற்கு 100 ரூபாவுமாக 200 ரூபா அளவிடுகின்றனர். இந்த வாகன தரிப்பிடம் தனிப்பட்ட ரீதியில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதா? இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை இதை வன்மையாக கண்டிக்கின்றோம்

எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்தால் 6 மாதத்துக்குள் வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைகட்டியொழுப்பிய மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியெழுப்புவோம். இது மக்கள் அரசாங்கம் மக்கள் ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம்” என்றனர்;.