LOADING

Type to search

சினிமா

தர்ஷன் கணேசன் நடித்த “லெனின் பாண்டியன்” படத்தின் முன்னோட்ட பதிவேற்றம்

Share

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் முன்னணி நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரன் நடித்துள்ளார். இதில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் மறு பிரவேசம் கொடுத்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இப்படத்தில் அவரது கதாபாத்திரன் பெயர் பிரியா என்றும் படக்குழு பதாகை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தர்ஷன் கணேசனின் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.