‘தலைவர் 173’ படம் குறித்து புதிய பதிவேற்றம் வெளியாகியுள்ளது
Share
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தலைவர் 173’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை ‘டிராகன்’ மற்றும் ‘ஓ மை கடவுளே’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபல இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தலைவர் 173’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் சாண்டி மாஸ்டரின் நடன அசைவில் ரஜினிகாந்துக்காக ஒரு அதிரடியான பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘தலைவர் 173’ ஒரு மிரட்டலான மாஸ் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















