LOADING

Type to search

உலக அரசியல்

தாய்லாந்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்

Share

தாய்லாந்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் , கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில், அந்நாட்டின் நராதிவெட் மாகாணம் புகிடா சமி நகரில் ராணுவ சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். பைக்கில் வந்த 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.