தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டது
Share
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் களம் இறங்கி உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
தாராபுரத்தில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார்கள். இந்த 2 தொகுதிகளிலும் சேர்த்து 99 பேர் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து உள்ளனர். அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றி கதுக வேட்பாளர் சத்திய பாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.















