“தாழ் திறவா” படத்தின் பதாகை வெளியானது
Share
பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் பேய் படம் “தாழ் திறவா”. இப்படத்தின் முன்னோட்டம் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் முதல்காட்சி பதாகைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
















