LOADING

Type to search

சினிமா

துரந்தர் தி ரிவெஞ்ச் படம் முதல் வாரத்தில் ரூ. 1088 கோடி வசூல்

Share

ஆதித்யா தார் இயக்கத்தில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ உருவாகி கடந்த 19-ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே கோடிக் கணக்கில் வசூலை வாரிக்குவித்தது. மேலும், படம் வெளியானது முதலே இந்தப் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளவில் ரூ.1088 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் ரூ. 1000 கோடி வசூலை அதிவேகமாக கடந்த இந்திய திரைப்படமாகவும் துரந்தர் 2 உள்ளது. உலகளவில் இந்தப் படம் ரூ. 1088 கோடி வசூலித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ. 814 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 274 கோடியும் வசூலித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் தி ரிவெஞ்ச் பெற்றுள்ளது.