LOADING

Type to search

உலக அரசியல்

நக்சிவன் விமானநிலைய தாக்குதல் – ஈரானில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது அஜர்பைஜான்

Share

அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையப் பகுதியில் நேற்று ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அரசு தெரிவித்தது. மேலும் இதற்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஈரான் இதற்கு விளக்கம் மற்றும் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டிலிருந்து தனது தூதரக பணியாளர்களை திரும்பப் பெற்றுள்ளது அஜர்பைஜான். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவை பிறப்பித்ததாக அஜர்பைஜான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள தூதரகம் மற்றும் தப்ரிஸில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அஜர்பைஜான் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதை ஈரான் நீண்டகாலமாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.