நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” படத்தின் பாடல் வெளியீடு
Share
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் வரி பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. “கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெல்லிசை, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் குரலில் உயிர் பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இஸட் ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த பதிவேற்றங்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின் காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.















