LOADING

Type to search

சினிமா

நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகிறது

Share

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகிறது. நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. ‘தசரா’ படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நானி நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம், ஹிட் 3 திரைப்படங்கள் வசூல் ரீதியாக ரூ. 100 கோடியைக் கடந்ததால் அவரது படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்து வருகின்றன. அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.