LOADING

Type to search

இந்திய அரசியல்

பணிநிரந்தரம் கோரி போராட்டம் செய்த மருத்துவப் பணியாளர்களை கைது செய்ததற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியதென திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு. விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்து கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதல்-அமைச்சர்?. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.