LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டையில் 17 பயங்கரவாதிகள் பலியாகினர்

Share

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த தாக்குதலில், பல்வேறு பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன. அப்போது, பித்னா-அல்-இந்துஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 17 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.