போரை முடிக்க கத்தார் தூதர்கள் ஈரான் விரைந்தனர்
Share
அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, கத்தார் தூதுக்குழு ஈரான் பயணம் மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தநிலையில், அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, கத்தார் தூதுக்குழு ஈரான் பயணம் மேற்கொண்டுள்ளது.
















