LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு-வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப்வண்டி சைக்கில் ஒன்றுடன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு! விசேட அதிரடிப்படை சாரதியும் கைது செய்யப்பட்டார்.!

Share

(கனகராஜா சரவணன்)

வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பரித்திச்சேனை சந்தியில் சைக்கிளுடன் விசேட அதிரடிப்படையின் ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்த 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் விசேட அதிரடிப்படை சாரதிகைது செய்யப்பட்டுள்ள சம்பவம் 13-04-2026 அன்று சனிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

கன்னங்குடா புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 67 வயதுடைய அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளளார்.

கல்லடி விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு சம்பவ தினமான சனிக்கிழமை இரவு ஜீபு;வண்டியில் சில சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தபோது பிரித்திச்சேiனை சந்தியில் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் விசே அதிரடிப்படையின் ஜீப் வண்டியை செலுத்திய சாரதியை பொலிசார் கைது செய்தனர்

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.