LOADING

Type to search

சினிமா

மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது

Share

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையல்ல என்றும், ஏ.ஆர்.ரகுமானே இசையமைப்பாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்காக ஏற்கனவே ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் அமைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 1992-ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படத்திலிருந்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வருகின்றனர். முன்னதாக, ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணிரத்னம், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்த முக்கிய பதிவேற்றம் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அழுத்தமான காதல் கதையாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இதன் ஒட்டுமொத்த ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 20 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.