மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார்
Share
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை சென்றுள்ளார். தனி விமானம் மூலம் இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்கை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இந்த பயணத்திபோது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாதுகாப்புத்துறை செயலாளர் சம்பத் தூயகொந்தா ஆகியோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. 38 ஆண்டுகளுக்குப்பின் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.















