மன்னாரில் இராணுவத்தின் 54 படைப் பிரிவின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
Share
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
இராணுவத்தின் 54 படைப் பிரிவின் ஏற்பாட்டில்,பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 4ம் திகதி அன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் குடும்ப நல பணியகத்தில் இடம் பெற்றது.
மன்னார் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 301 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாதுகாப்பு படையணி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலதுங்க கலந்து கொண்டார்.
மேலும் சர்வமத தலைவர்கள், இராணுவத்தின் 54 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.எம்.என். பெரேரா, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மனித உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பு மற்றும் சமாதான தூதுவர் ஷேக் ஆமானி மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,உற்பட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது வருகை தந்த விருந்தினர்களினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















