LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் ‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தையல் பயிற்சித் திட்டம்!

Share

மன்னார் நிருபர்
(20-04-2026)

மன்னார். ஜீவ ஊற்று அன்பின் கரம் அலுவலகம் மார்ச் மாதம் (26) ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக்கொட்டு பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ள தோடு பெண்களுக்கான தையல் பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘ஜீவ ஊற்று அன்பின் கரம்’ அமைபின் ஸ்தாபகர் பெல்ஜியத்தில் வசித்து வரும் ஜெஜீவனின் வழி காட்டுதலில் இலங்கையின் பல இடங்களில் தமது மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட 25 பெண்களுக்கு மூன்று மாத கால தையல் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தையல் பயிற்சிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த பயிற்சியில் சுமார் 25 பெண்கள் வரை கலந்து கொண்டு தையல் பயிற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.